ETV Bharat / state

தென்காசியில் பெண்ணுக்கு கரோனா - 3 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்த வட்டாட்சியர் - impact of Tenkasi corona

தென்காசி: சென்னையிலிருந்து வி.கே. புதூருக்கு வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வி.கே.புதூர் தாலுகாவில் இன்று முதல் மூன்று நாட்கள் முழு ஊரடங்கை வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.

3 நாட்கள் முழு ஊரடங்கு
3 நாட்கள் முழு ஊரடங்கு
author img

By

Published : May 17, 2020, 11:37 PM IST

தென்காசி மாவட்டத்தில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து பலர் சொந்த ஊர் திரும்புவதால் கடந்த சில தினங்களாக தென்காசி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் தாலுகா ராஜகோபாலபேரி பகுதிக்கு சென்னையில் இருந்து வந்த பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, வி.கே.புதூர் தாலுக்காவுக்கு உட்பட்ட சுரண்டை உள்பட அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் மூன்று நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வி.கே.புதூர் வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த சமயத்தில் மெடிக்கல், மருத்துவமனைகள் மட்டும் திறந்திருக்கும் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் வேகமாக கரோனா பரவி வரும் சூழலில் கரோனா பாதித்த தாலுக்காவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாவட்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனாவால் வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க வியூகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.