தமிழ்நாடு அரசின் ஊரக திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழு, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள், நலிவுற்றோர், புலம்பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு புதிதாக தொழில் தொடங்க நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் கீழப்பாவூர் ஆகிய இரண்டு வட்டாரங்களில் 46 ஊராட்சிகளில் 2341 பயனாளிகளுக்கு ரூ. 4.66 கோடியில் கரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டம் வழங்கும் நிகழ்ச்சி கடையம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், முதல்கட்டமாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி 20 பயனாளிகளுக்கு நிதி உதவிக்கான காசோலைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தென்காசி ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.