தமிழ்நாட்டில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பொது இடங்களில் ஒன்று கூடி விளையாடி வருகின்றனர். இதன் மூலம் வைரஸ் சமூக தொற்றாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதை தடுப்பதற்காக தமிழ்நாடு காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ட்ரோன் மூலம் பொது இடங்களில் விளையாடி வரும் இளைஞர்களை கண்காணித்து அவர்களை விரட்டியடித்தனர்.
அதேபோல் தென்காசி மாவட்டத்திலும் காவல் துறையினர் ட்ரோன் மூலம் பொது இடங்களில் சுற்றித்திரிந்த இளைஞர்களை தெறிக்கவிட்டனர். காவலர்கள் ட்ரோன் மூலம் எடுத்த காணொலியில் தென்காசி அச்சன்புதூர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் காவல் துறையினர் அனுப்பிய ட்ரோனை பார்த்து தெறித்து ஓடுவது போன்றும் அதன் பின்னணியில் சினிமா காமெடி இசை ஒலிப்பது போன்றும் பதிவாகி உள்ளது.
இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: நாட்டுப் படகுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் மீன்பிடிக்க அனுமதி - தமிழ்நாடு அரசு