தென்காசி மாவட்டத்தில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மாவட்டத்தில் இதுவரை 277 பேர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 110 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்களைத் தனிமைப்படுத்தி வருகின்றனர்.
அதன் பின்னர், அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுமாயின் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இதுவரை ஒன்பது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாவட்டத்திற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தென்காசி மாவட்டதின் ஆலங்குளம் பகுதியில் சோதனைச்சாவடி அருகே அமைந்துள்ள ஆலங்குளம் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு, காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரவல், சாத்தான்குளம் விவகாரம்: டிஜிபி சுற்றறிக்கை!