தென்காசி: நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளநிலையில், தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, தென்காசி அருகிலுள்ள பாவூர்சத்திரம் இலங்கை அகதிகள் முகாமில், 9 குடும்பங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கரோனோ தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.
அதன்படி இன்று (மே 19) பாவூர்சத்திரம் கடையம் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்குக் கரோனோ தொற்று கண்டறியும் சளி மாதிரி எடுக்கும் பணிகள் கீழப்பாவூர் வட்டார சுகாதார நிலையம் சார்பில் இன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த முகாமிலுள்ள ஒரு நபருக்கு மட்டும் கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 23 நபர்களுக்கு சளி மாதிரிகள் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதையும் படிங்க: குறைந்த செலவில் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியை உருவாக்கி சேலம் இளைஞர் சாதனை