ETV Bharat / state

கரோனா: குணமடைந்த 13 பேர் ஒரே நாளில் விடுவிப்பு - Coronavirus victims in Denkasi were healed

தென்காசி: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 13 பேர் குணமடைந்து நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 13 பேர்

author img

By

Published : Apr 15, 2020, 5:48 PM IST

கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு நெல்லை மேலப்பாளையம், பாளையங்கோட்டை, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடந்த மாதம் 30ஆம் தேதி, 13 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் கரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், நேற்றைய தினம் இரவில், மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 13 பேர் வீடு திரும்பினர்

இதில் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 9 பேர், பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவர், களக்காடு பகுதியை சேர்ந்த 2 பேர் உள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும், மேலும் 14 நாட்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து சென்ற அவர்கள் மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரத் துறையினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். பின்னர் வீடுகளுக்கு சென்ற அவர்களை உறவினர்கள் கைத்தட்டி வரவேற்றனர்.

இதையும் படிங்க: மாவட்ட வாரியாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.