தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை(55). விவசாய கூலியான இவர் கரோனா ஊரடங்கு காரணமாக மதுபானக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் தனது வீட்டில் வைத்து கள்ள சாராய வடிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவ்வாறு லிட்டர் கணக்கில் சாராயம் வடித்து அப்பகுதியில் விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று 200லிட்டர் சாராயம் வடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளாதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் புளியங்குடி காவல்துறை கண்காணிப்பாளர் சுவாமிநாதன் உத்தரவின்படி ஆய்வாளர் அலக்ஸ்ராஜ் , உதவி ஆய்வாளர் காசிவிஸ்வநாதன் ஆகியோர் விரைந்து சென்றுள்ளனர்.
காவல்துறையினரை கண்டதும் வெள்ளதுரை தப்பியோடியுள்ளார். காவல்துறையினர் கள்ளச்சாராயம் வடிப்பதற்காக வைத்திருந்த ஊரல்களை கைப்பற்றி அழித்தனர். மேலும் தப்பியோடிய வெள்ளத்துரை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் விடுதலை: கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்!