ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் - tamilnadu latest news

தென்காசி: மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

கருத்து கேட்பு கூட்டம்
கருத்து கேட்பு கூட்டம்
author img

By

Published : Jan 6, 2021, 7:13 AM IST

தென்காசி மாவட்ட விவசாயிகளின் 48 வருடம் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு ரூ.41 கோடியே 8 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கினார்.

தற்போது அங்கு கால்வாய் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கையகப்படுத்திய விளைநிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.

இதனால் அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தனர். நேற்று (ஜன.5) மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது.

இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கையகப்படுத்திய விளை நிலங்களுக்கு இழப்பீடு தொகை குறித்து கேட்டனர்.

அதற்கு இழப்பீடு தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கைப்பேசிக்கு விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.