தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருபவர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள். இவரது அஞ்சல் வாக்குச்சீட்டு ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, தென்காசி மாவட்டத் தேர்தல் அலுவலர் சமீரனிடம் தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி புகார் அளித்தார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 30) திமுகவிற்குச் சாதகமாக உள்ள 90 விழுக்காடு அரசு ஊழியர்களின் வாக்குகளை முறைகேடாகப் பயன்படுத்த சிலர் முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் தென்காசி காங்கிரஸ் வேட்பாளர் பழனி புகார் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: இவருக்குத்தான் ஓட்டு போட்டேன்.. வைரலான தபால் வாக்குச்சீட்டால் ஆசிரியர் உள்பட மூவர் கைது