ETV Bharat / state

எண்ணிப் பார்க்காமல் பணத்தை வாங்கியது குத்தமா?... ரூ.500 நோட்டு கட்டுக்குள் ரூ.10 வைத்து நூதன மோசடி! ரூ.21 லட்சம் மோசடி செய்து எஸ்கேப்!

Money Cheating Issue in Tenkasi: தென்காசி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய 500 ரூபாய் நோட்டு கட்டுகளுக்கிடையே 10 ரூபாய் தாள்களை வைத்து சுமார் 21 லட்ச ரூபாய் நூதன மோசடி செய்த நபர் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Money Cheating Issue in Tenkasi
எண்ணிப் பார்க்காமல் ரூபாய் நோட்டுகளை வாங்கியது குற்றமா... 21 லட்சம் அபேஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 7:27 AM IST

தென்காசி சார் பதிவாளர் அலுவலகத்தில் மோசடி

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார். அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த கடனை கட்ட முடியாத சூழலில், ராஜ்குமார் தனக்கு சொந்தமாக மேலகரம் பகுதியில் உள்ள 4 சென்ட் இடத்தை 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளார்.

மேலும் கடன் தொகை ரூ.4 லட்சத்தை கழித்து ரூ.21 லட்சம் பணத்தை தருவதாக இருதரப்பும் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தென்காசி ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடைபெற்ற நிலையில், செந்தில்குமார் ரூ.21 லட்சம் பண கட்டுகள் அடங்கிய பையை ராஜ்குமாரிடம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அப்போது நம்பிக்கையின் அடிப்படையில் பணப்பையை வாங்கிய ராஜ்குமார் பத்திரம் பதிவு செய்துள்ளார். பின்னர், வெளியே வந்து ரூபாய் நோட்டுகளை எண்ணிப் பார்த்துள்ளார். அதனைக் கண்டவுடன் ராஜ்குமாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த பணப்பையில் ரூ.500 நோட்டுக் கட்டுகள் என்ற பெயரில் மேல் பகுதியில் மட்டும் 500 ரூபாய் நோட்டை வைத்துவிட்டு, கட்டுகள் உள்ளே 10 ரூபாய் நோட்டுகளை வைத்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

அதேபோல 9 கட்டுகளிலும் 500 ரூபாய் நோட்டுகளுடன் 10 ரூபாய் நோட்டுகள் வைத்து சுமார் 21 லட்சம் கொடுக்க வேண்டிய இடத்தில், ரூ.40 ஆயிரம் மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது. அதனால் தான் ஏமாற்றபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் தொலைபேசியில் செந்தில்குமாரை அழைத்தபோது அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதை கண்டு மன உளைச்சக்கு உள்ளாகி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நம்பிக்கையின் பெயரில் அவரிடம் பணத்தைப் பெற்றதாகவும், ஆனால் தான் ஏமாற்றப்பட்டது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளதாகவும் தெரிவித்தார். பத்திரப் பதிவுக்கு 500 ரூபாய் கட்டுகளுக்கு இடையே பத்து ரூபாய் தாள்களை வைத்து ரூ.21 லட்சம் நூதன மோசடி செய்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஆம்பூர் அருகே தேநீர் கடையில் ஏற்பட்ட தீ விபத்து.. ரூபாய் 2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.