தமிழ்நாட்டில், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிரபரப்புரை பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டனர். தேர்தலுக்கு தேவையான வாக்கு இயந்திரங்களும் அந்தந்த மாவட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் வாயிலாக அனுப்பிவைக்கப்படுகிறது.
வாக்குப்பதிவு இயந்திரம்
அந்த வகையில், தென்காசி மாவட்டத்திற்கு தேவையான மூன்றாயிரத்து 260 வாக்குப்பதிவு இயந்திரங்கள், இரண்டாயிரத்து 490 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், இரண்டாயிரத்து 680 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
சரிபார்க்கும் பணி
இந்நிலையில், இன்று மின்ணணு வாக்கு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணியானது ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைத்து தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் திமுக, அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இயந்திரங்களை இயக்கி சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
இதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் சார் ஆட்சியர் பத்மஜா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இந்த ஆய்வில், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் துரைராஜ், சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாரதிபாலன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: குடியாத்தம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடக்கம்!