ETV Bharat / state

மாணவர்களின் சேமிப்பை வாங்க மறுத்த பாலா.. காரணம் என்ன?

தென்காசியில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நகைச்சுவை நடிகர் பாலா, தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை புத்தாண்டுக்குள் சந்திப்பேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தென்காசியில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நகைச்சுவை நடிகர் பாலா

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 3:42 PM IST

Updated : Dec 23, 2023, 4:20 PM IST

தென்காசியில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நகைச்சுவை நடிகர் பாலா

தென்காசி: தென்காசி மாவட்டம் கடுமையான வெள்ள பாதிப்புகளில் இருந்து அதன் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நகைச்சுவை நடிகர் பாலா தென்காசிக்கு வந்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, "முதலில் இந்த நிகழ்ச்சி டிச.19ஆம் தேதி அன்று திட்டமிடப்பட்டது. ஆனால் வெள்ளத்தினால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்தியதற்கு தலைமை ஆசிரியர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடம் சேமிப்பு தொகையாக இருந்த 5 லட்சம் ரூபாயை, சென்னை வெள்ள நிவாரணத்தின்போது மக்களுக்காக கொடுத்துவிட்டேன். தற்போது தென் மாவட்டங்களிலும் பெய்த கனமழையால், இப்பகுதிகளிலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்புக் காரணமாக, மக்கள் அத்தியாவசியப் பொருட்களான ஒவ்வொன்றுக்கும் அதிகளவு தேவைகளில் உள்ளனர். எனவே, வெறும் கையோடு செல்ல விரும்பவில்லை. கண்டிப்பான முறையில் பணத்தை தயார் செய்துவிட்டு, புத்தாண்டுக்குள் தென்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை கட்டாயம் சந்திப்பேன்.

எதையாவது கொண்டு செல்ல வேண்டும் என எண்ணியதால் மட்டுமே, நான் இன்னும் மக்களை பார்க்காமல் இருக்கிறேன். ஆனால், என்னால் இயன்ற அளவிற்கு நான் முயற்சி செய்வேன். மேலும் நிவாரண உதவி கொடுத்து வரும் நிலையில், என்னை ஊக்கப்படுத்தும் விதமாக மேடைகளில் பேசி வரும் சீமான் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

முன்னதாக பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் தாங்கள் திரட்டிய நிவாரணத் தொகையை பாலாவிடம் கொடுத்து நிலையில், தான் தனது பணத்தில் இருந்து உதவவே விரும்புவதாகவும், இந்த பணத்தை நீங்களே நேரடியாக மக்களுக்கு கொடுங்கள் என தெரிவித்தது அங்கிருந்தவர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றது.

இதையும் படிங்க: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 'மரியாதைக்குரிய' அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Last Updated : Dec 23, 2023, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.