தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள 44 ஆயிரத்து 702 வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகள் அவர்களின் முகவரிக்கே அஞ்சல் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தென்காசி கோட்டத்திற்கான புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சமீரன் வெளியிட, வாக்காளர் பதிவு அலுவலர், தென்காசி வருவாய் கோட்டாச்சியர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா, கோட்டாட்சியர் ராமசந்திரன், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நாட்டில் பிச்சைகாரர்களின் எண்ணிக்கை 4 லட்சம்!