தென்காசி: வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கலை கல்லூரி மாணவிகள், தாருகாபுரம் கிராமத்தில் நாட்டு நலப் பணித் திட்டம் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். ஏழு நாட்கள் நடைபெற்ற இத்திட்டப்பணிகளில் வெவ்வேறு விதமான நிகழ்ச்சியில் சித்த மருத்துவத்தின் பயன்கள், 108 அவசர வாகன சேவை, செயல் முறை விளக்கம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
மேலும் கிராம இல்லத்தரசிகளுக்கான கோலப்போட்டிகள், விவசாய விழிப்புணர்வு நடனம், பொங்கலோ பொங்கல் நடனம், மணப்பாறை நடனம், பொன்னீதி நடனம், தீயணைப்பு குறித்ததான விளக்க உரை மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் ஏழு நாட்களும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சிகளை வியாசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் நாட்டு நலப் பணித் திட்டத்தின் மூலம் தாருகாபுரம் கிராமத்தில் செயல்படுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியில் தாருகாபுரம் கிராமத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த ஏழு நாட்களில் நாட்டு நலப் பணித் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிகழ்ச்சியும், ஒவ்வொரு அனுபவமும் கிடைத்ததாக கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "கூடா நட்பு கேடாய் முடியும்": நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது ஏற்பட்ட விபரீதம்!