வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் ஆறாவது கட்ட தேர்தல் பரப்புரைக்காக நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது நாளாக நேற்று (பிப். 18) திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார்.
![தென்காசியில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-04-cm-campaign-speech-tn10038-sd_18022021212839_1802f_1613663919_587.jpg)
சாலையோரக் கடையில் தேநீர் குடித்த எடப்பாடி
இதன் ஒரு பகுதியாக ஆலங்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இளைஞர் பாசறை, தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளோடு முதலமைச்சர் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, மகிழ்வண்ணநாதபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், அங்குள்ள தேநீர் கடையைப் பார்த்து வாகனத்தை நிறுத்தச் சொல்லி தேநீர் கடைக்குச் சென்றார்.
![பரபரப்புகளுக்கிடையே ஹாயான பயணம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-05-cm-tea-shop-tn10038_18022021232552_1802f_1613670952_34.jpg)
பின்பு அங்கு தேநீர் அருந்திவிட்டு, தேநீர் மிகவும் சுவையாக இருந்ததாகவும் கடையின் உரிமையாளரைப் பாராட்டினார். பரப்புரை பரபரப்புகளுக்கிடையே ஹாயாக சாலையோரக் கடையில் எடப்பாடி பழனிசாமி தேநீர் அருந்தியது அப்பகுதியிருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: EXCLUSIVE: 'தலைசிறந்த அலுவலர்களை உருவாக்கும் தமிழ்நாடு போலீஸ் அகாடமி'