தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் இரண்டாவது நாளாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர், "இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான், ஊழலில் சாதனை படைத்த ஒரே கட்சி திமுக. ஸ்டாலின் எவ்வளவு நாடகங்கள் நடத்தினாலும் மக்களிடம் அது எடுபடாது.
தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு காலத்தில் விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் என சுமார் 10 லட்சம் பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது. இந்த வழக்குகளில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும்.
கூடங்குளம் போரோட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்த வழக்குகள் அனைத்தும் சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: