ETV Bharat / state

தென்காசி சட்டப்பேரவைத்தேர்தல்.. தபால் வாக்கு குளறுபடி... மீண்டும் எண்ணத் தயாரான மையம்! - Tenkasi news

தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகள் மீண்டும் எண்ணி அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகள் மீண்டும் எண்ண ஆயத்தப் பணிகள் தீவிரம்

author img

By

Published : Jul 11, 2023, 7:57 PM IST

தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகள் மீண்டும் எண்ண ஆயத்தப் பணிகள் தீவிரம்

தென்காசி: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான வாக்குகளில் குளறுபடி இருப்பதாக கூறி மீண்டும் வாக்குகளை எண்ணி முடிவை அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 2021 தென்காசி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி, அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களை 370 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் சென்னை நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பாக வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ''தேர்தலில் பதிவான வாக்குகள் மற்றும் அறிவிக்கப்பட்ட வாக்குகள் இரண்டிற்குமான எண்ணிக்கைக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஆகையால், தபால் வாக்குகளையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தபால் வாக்குகளில் குளறுபடி உள்ளதாகக் கூறி மீண்டும் வாக்குகளை எண்ணி முடிவை அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சரின் பொய்யான பரப்புரை: பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - வானதி சீனிவாசன்

இந்நிலையில் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காவல் உதவி கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணி குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 13ஆம் தேதி காலை 10 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கப்படும் எனவும், வேட்பாளர்கள் 18 நபர்கள் உள்ள நிலையில் வேட்பாளர்கள் அல்லது ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என 18 முகவர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது பங்கேற்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

எனவே, பங்கேற்க விரும்பும் முகவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை காலை 10 மணி அளவில் ஒரு மேஜை கணக்கில் ஏழு பேர் கொண்ட குழு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ளது. மேலும் எண்ணப்பட்டுள்ள இறுதி வாக்கு எண்ணிக்கை அறிக்கையாக தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் வாயிலாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: K Palaniswami: அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து பதிவு.. தேர்தல் ஆணைய முடியாவல் ஈபிஎஸ் தரப்பு கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.