ETV Bharat / state

''விவசாயிகளின் வாழ்க்கையைக் குழி தோண்டி புதைக்கிறது திமுக'' - பி.ஆர். பாண்டியன் - கனிம வள கொள்ளை

விவசாயிகளின் வாழ்க்கையைக் குழி தோண்டி புதைக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு உள்ளது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

”விவசாயிகளின் வாழ்கையை குழி தோண்டி புதைக்கிறது திமுக” - பி.ஆர். பாண்டியன்
”விவசாயிகளின் வாழ்க்கையை குழி தோண்டி புதைக்கிறது திமுக” - பி.ஆர். பாண்டியன்
author img

By

Published : May 15, 2023, 4:56 PM IST

Updated : May 15, 2023, 5:59 PM IST

''விவசாயிகளின் வாழ்க்கையைக் குழி தோண்டி புதைக்கிறது திமுக'' - பி.ஆர். பாண்டியன்

தென்காசி: குற்றாலத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டம், குழுவின் மாநிலப் பொதுக்குழு கூட்டத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள பல விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ’தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்பப் பெற வேண்டும்.

கனிம வள கொள்ளையையும், கனிம வளங்களையும் வெளி நாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ உள்ளிட்ட 61 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர். பாண்டியன் கூறுகையில், ”தமிழகத்தில் கனிம வளங்கள் கடத்தப்படுவதால் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகிறது. மேலும், தென் மாவட்டங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வளங்கள் சூறையாடப்படுவதாலும், வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமலும் வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் கிராமங்களுக்கும், விளை நிலங்களுக்கு வருகின்ற சூழல் ஏற்பட்டு உள்ளது.

மேலும் தமிழக அரசு கனிம வளக் கடத்தலைக் கண்டு கொள்ளாமல், நீர் நிலைகளை பாதுகாக்க உயர் நிலைக் குழுவை அமைத்திருக்கிறேன் என்ற பெயரில் தமிழக அரசு தங்களை தாங்களே பாராட்டிக் கொள்கிறது” எனக் கூறினார். மேலும் பேசிய பி.ஆர். பாண்டியன், ”திமுக அரசின் இரண்டு ஆண்டுகள் கால ஆட்சி என்பது விவசாயிகளுக்கு எதிராகவும், விவசாயிகளின் வாழ்க்கையை குழி தோண்டி புதைக்கும் வகையிலும் உள்ளது. அந்த வகையில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளோம். அதற்காக பிரசார பயணம் செய்ய போகிறேன்’’ என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதையும் படிங்க: 12 பேர் உயிரைக் குடித்த கள்ளச்சாராயம்.. தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி ஆணை!

இதையும் படிங்க: TN Toxic Liquor Death: விழுப்புரம், செங்கல்பட்டு கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு!

Last Updated : May 15, 2023, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.