ETV Bharat / state

ரூ.350 மெட்டிக்கு ரூ.20 ஆயிரம் செல்போன்.. டிப் டாப் ஆசாமியின் நூதன திருட்டு வீடியோ! - social media

பாவூர்சத்திரத்தில் 350 ரூபாய்க்கு மெட்டி வாங்கி விட்டு 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிச் சென்ற டிப் டாப் ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தென்காசியில் செல்போனை திருடிச் சென்ற டிப் டாப் ஆசாமி

author img

By

Published : May 12, 2023, 1:30 PM IST

டிப் டாப் ஆசாமியின் நூதன திருட்டு வீடியோ!

தென்காசி: பாவூர்சத்திரத்தில் கடையம் செல்லும் பிரதானச் சாலையில் குறும்பலாபேரி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் செந்தூர் ஜுவல்லரி எனும் பெயரில் நகைக் கடை நடத்தி வருகிறார். கடைக்கு பல வாடிக்கையாளர்கள் வந்து நகைகள் வாங்கி சென்ற நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பேண்ட் சட்டை அணிந்து டிப் டாப்பாக கடைக்கு வந்த நபர் ஒருவர் 350 ரூபாய்க்கு மெட்டி வாங்குவது போல் நோட்டம் பார்க்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அப்போது 500 ரூபாய் கொடுத்து விட்டு மீதி சில்லறையை நகை கடையின் உரிமையாளர் சந்திரசேகரன் எடுத்துக் கொடுக்கும் சில விநாடி இடைவெளியில் மேசையில் இருந்த கடைக் காரருக்குச் சொந்தமான 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை தனது செல்போன் போன்று எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு வேகமாக வெளியேறுகிறார் அந்த நபர்.

இது குறித்து சில நிமிடங்கள் கழித்து தெரிந்துகொண்ட கடை உரிமையாளர் கடையினுள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தார். அப்பொழுது பேண்ட் சட்டை அணிந்து டிப் டாப்பாக வந்த நபர் செல்போனை எடுப்பது அதில் தெளிவாக பதிவாகி இருந்தது.

ஒரு மணி நேரமாக தனது செல்போன் எண்ணிற்கு மற்றொரு செல்போன் மூலம் கடையின் உரிமையாளர் சந்திரசேகர் போன் செய்த போது முழுமையாக ரிங் சென்ற நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. இது குறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் சந்திரசேகர் அளித்த புகாரின் அடிப்படையில் டிப் டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இது எங்க ஏரியா..! தாதா பிரச்னையில் தகராறு.. சென்னையில் 4 புள்ளிங்கோ கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.