ETV Bharat / state

சிறுவர்களிடம் தீண்டாமை விதைக்கும் விதமாக பேச்சு...பெட்டிக்கடைக்காரர் கைது...

தென்காசி அருகே சிறுவர்கள் மனதில் தீண்டாமை விதைக்கும் விதமாக பேசிய பெட்டிக் கடைக்காரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 17, 2022, 12:00 PM IST

Updated : Sep 17, 2022, 12:50 PM IST

தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சான்குளம் பகுதி பள்ளி சிறுவர்கள் சிலர், பள்ளி செல்லும் முன் தின்பண்டங்கள் வாங்க பெட்டிக் கடைக்கு சென்றுள்ளனர்.

அப்போது, அக்கடைக்காரர் சிறுவர்களிடம் உங்களுக்கு திண்பண்டம் தர இயலாது என்றும், ஊரில் அனைவரும் கூடி கட்டுப்பாடு விதித்துள்ளனர் என கூறியுள்ளார்.

இதற்கு அச்சிறுவர்கள் ‘கட்டுப்பாடா?, என்ன கட்டுப்பாடு?’ என கேட்க, அதற்கு கடைக்காரர் ‘ஆமாம், ஊரில் உள்ள அனைவரும் சேர்ந்து உங்கள் தெருவில் உள்ளவர்களுக்கு எதுவும் தரக் கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளனர்’ என இளஞ்சிறுவர்கள் மனதில் சாதித் தீண்டாமை விதைக்கும் விதமாக பேசிய வீடியோ சமூக வளைதளங்களில் வைரலானது.

சிறுவர்களிடம் தீண்டாமை விதைக்கும் விதமாக பேச்சு

இதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், பெட்டிக்கடைக்காரர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பத்து ஆண்டுகளாக தண்டைக்கும் ஆளாகாத காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா...

Last Updated : Sep 17, 2022, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.