ETV Bharat / state

சங்கரன்கோவிலில் பொதுமக்கள் கறுப்புக்கொடி ஏற்றி கண்டனம்! - Sangarankovil corporation

தென்காசி: சங்கரன்கோவிலில் 19ஆவது வார்டு பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி தங்களது கண்டனத்தையும் பதிவுசெய்தனர்.

தேர்தல்ல புறக்கணிப்புப் போராட்டம்
தேர்தல்ல புறக்கணிப்புப் போராட்டம்
author img

By

Published : Mar 3, 2021, 11:22 AM IST

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சிக்குள்பட்ட 19ஆவது வார்டு பாட்டத்தூர் கிராமத்தில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக அடிப்படை வசதிகள் அமைத்துத்தராத நகராட்சியைக் கண்டித்தும், அடிப்படை வசதிகள் அமைத்துத் தரக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கீழ்காணும் கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். அவை,

சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் பாட்டத்தூர் கிராமம்

1. கழிவு நீர் வாருகால் வசதி

2. மயான எரிகூடம் அமைத்தல்

3. அபாயகரமாக உள்ள ஊர் கிணற்றில் இரும்பு வளை அமைத்தல் ஆகும்.

தேர்தல்ல புறக்கணிப்புப் போராட்டம்
தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை

மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்தும், ஆர்ப்பாட்டம் செய்தும், முற்றுகைப் போராட்டம் நடத்தியும் செவிசாய்க்காத சங்கரன்கோவில் நகராட்சி ஆணையர், சங்கரன்கோவில் நகராட்சி பொறியாளர் அப்துல் காதரை கண்டித்தும் பாட்டத்தூர் கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.

மேலும் கிராமம் முழுவதும் கறுப்புக்கொடி ஏற்றி தங்களது கண்டனத்தையும் மக்கள் பதிவு செய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.