ETV Bharat / state

குளத்தில் வளர்க்கப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு!

தென்காசி: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்பேரில், சுரண்டை அருகே குளத்தை ஆய்வுசெய்த மீன்வளத் துறை அலுவலர்கள், அக்குளத்தில் வளர்க்கப்பட்டுவந்த தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை குழியில் புதைத்து அழித்தனர்.

banned african fishes grown in tenkasi
banned african fishes grown in tenkasi
author img

By

Published : Jul 20, 2020, 7:34 PM IST

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால் அது நீர்நிலைகளில் உள்ள பிற உயிரினங்களை வேகமாக அழித்துவிடும். அதேபோல் நம் நாட்டைச் சேர்ந்த பாரம்பரிய மீன்களையும் முற்றிலும் அழித்துவிடும் தன்மைகொண்டது. எனவே, ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளம் கிராமத்தில், குளம் ஒன்றில் குத்தகைத்தாரர் ஒருவர் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் இன மீன் வகைகளை வளர்ப்பதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மீன்வளத்துறை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வுசெய்து சம்பந்தப்பட்ட குளத்தில் தடைசெய்யப்பட்ட மீன்கள் வளர்க்கப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

குழிதோண்டி புதைக்கப்பட்ட மீன்கள்

அதனடிப்படையில் குளத்தில் ஆய்வுசெய்யும்படி பொதுப்பணித் துறை, மீன்வளத் துறை அலுவலர்களுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து இன்று (ஜூலை 20) தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரியைச் சேர்ந்த திறனாய்வாளர்கள் இரட்டைகுளம் கிராமத்தில் நீதிமன்றம் கூறிய குளத்தில் நேரடியாக ஆய்வுசெய்தனர்.

அப்போது குளத்தில் தடைசெய்யப்பட்ட கொடூர ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்ப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மீன்களை அலுவலர்கள் முன்னிலையில் நிலத்தில் மண் தோண்டி புதைத்து அழித்தனர். இதுகுறித்தான அறிக்கையையும் அலுவலர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதையும் படிங்க... 'தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி பிடித்த மீன்கள் கடத்தலா?' காவல் துறையினர் அதிரடி சோதனை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.