தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட துணை இராணுவப் படையினர் வருகை தந்துள்ளனர்.
இதைதொடர்ந்து பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தென்காசியில் இன்று மத்திய துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலமானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுனா சிங் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஊர்வலமானது தென்காசி மாவட்ட எல்லை பகுதியில் தொடங்கி, முக்கிய நகர்புறம் வழியாக சென்று காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு நிறைவடைந்தது. இதில் காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆம்பூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த ஆட்சியர்!