ETV Bharat / state

சீட்டுப் பணம் செலுத்தாத பெண்ணிற்கு அரிவாள் வெட்டு!

தென்காசி: ஊரடங்கால் வருமானமின்றி சீட்டுப் பணம் செலுத்த இயலாத பெண்ணைப் பணம் செலுத்தச் சொல்லி தொடர்ந்து கட்டாயப்படுத்திவந்த நபர், அப்பெண்ணை அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Attempted murder on woman in Bulavanur
Attempted murder on woman in Bulavanur
author img

By

Published : Jul 20, 2020, 12:36 PM IST

தென்காசி மாவட்டம் புலவனூர், பொன்மலை நகரைச் சேர்ந்தவர்கள் முத்தரசு, மகேஸ்வரி தம்பதியினர். கூலித் தொழிலாளியான மகேஸ்வரி, அப்பகுதியில் வசிக்கும் வைகுண்டமணியிடம் மாத சீட்டிற்குப் பணம் செலுத்தி வந்துள்ளார்.

தற்போது ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்ல முடியாததால் வருமானம் ஏதுமின்றி தவித்துவந்த மகேஸ்வரி, கடந்த மூன்று மாதங்களாகச் சீட்டுப் பணம் செலுத்தவில்லை. இதனால் அவரின் வீட்டிற்கு வைகுண்டமணி அடிக்கடி சென்று பணம் செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

நேற்றும் (ஜூலை 19) மகேஸ்வரியின் வீட்டிற்குச் சென்ற வைகுண்டமணி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிவிட்டுத் தப்பியோடினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையம் காவல் துறையினர் படுகாயமடைந்த மகேஸ்வரியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சையாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் தப்பியோடிய வைகுண்டமணியைத் தேடிவருகின்றனர்.

ஊரடங்கால் வாழ்வாதரத்தையே இழந்துதவித்த பலர் தனியார் நிதி நிறுவனங்கள் தரும் நெருக்கடியால் தற்கொலை செய்து வரும் நிலையில், தனியார் நிதி நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒருவர் சீட்டுப் பணம் செலுத்தாத காரணத்திற்காக கொலைசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கடன் தொல்லை - பெண் தீக்குளிப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.