தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே ஸ்ரீரெங்கராஜபுரம் பகுதியில் மார்ச் மாதம் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. அதில் மூன்று போ் உடல் கருகி உயிரிழந்நதனர்.
இச்சம்பவத்தில் ஆலை மேலாளா் கைது செய்யப்பட்டு சங்கரன்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஜாமீனில் வெளியே எடுக்க சம்பந்தபட்ட ஆலை நிர்வாகம் முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் அவருக்கு சிறையில் சலுகை காட்டுவதற்கு சம்பந்தபட்ட சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றும் செங்கோட்டையைச் சேர்ந்த வைரமணி, பட்டாசு ஆலை மேலாளரின் உறவினரிடம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
தொடர்ந்து அவர் பணம் கேட்டு தொந்தரவு செய்யவே அந்த ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில் பணியில் உள்ள மற்றொரு உதவி ஜெயிலருக்கு 14 ஆயிரம் வரை பணம் கொடுத்துள்ளீர்கள். அவர் எந்த சலுகையும் உங்கள் ஆளுக்கு காட்டவில்லை. என்னை குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து பணம் தர வேண்டும் என்பது போல ஆடியோ நீள்கிறது.
இது தொடா்பாக வைரமணியின் ஆடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளா் கிருஷ்ணகுமார் உதவி ஜெயிலர் வைரமணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதில் மற்றொரு உதவி ஜெயிலர் 14 ஆயிரம் பணம் பெற்றதாக வைரமணி தெரவிக்கும் நிலையில், அது தொடா்பாக சங்கரன்கோவில் சிறையில் பணியாற்றும் ஜெயிலா், உதவி ஜெயிலர், காவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக சிறைத்துறை வட்டதரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: டிக் டாக் மோகம்: முறைவாசல் செய்த காவல்துறையினர்!