ETV Bharat / state

பேரிகார்டை அகற்றிய விசிக நிர்வாகிகள்; போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! - விசிக

VCK argument with police: தென்காசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பேரிகார்ட் தடுப்புகளை அகற்றிய விசிக நிர்வாகிகளுடன் போலீசார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசார்
பேரிகார்டை அகற்றிய விசிக நிர்வாகிகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 5:27 PM IST

Updated : Jan 4, 2024, 5:41 PM IST

பேரிகார்டை அகற்றிய விசிக நிர்வாகிகள்

தென்காசி: வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைபடுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தென்காசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, பேரிகார்ட் தடுப்புகளை கட்சியினர் அகற்றியதால் விசிக நிர்வாகிகள் மற்றும் போலீசாரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தமிழ்நாட்டில் புயல் மழை வெள்ளத்தை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிப்பு செய்து ரூ.21 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கக் கோரியும், வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைபடுத்தக் கோரியும் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் செல்வம், ஜான் தாமஸ், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வர்கீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக புதிய பேருந்து நிலையம் முன்பாக காவல்துறை சார்பில் பேரிகார்டை வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: உலக முதலீட்டாளர்கள் மாநாடு; முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

அந்த தடுப்புகளை வி.சி.க நிர்வகிகள் அகற்றி விட்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர், அனைத்து அரசியல் கட்சியினரும் பேரிகார்டின் உட்பகுதியில் இருந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் நிலையில், நீங்கள் ஏன் பேரிகார்ட் தடுப்புகளை அகற்றுகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனால் வி.சி.க நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக புதிய பேருந்து நிலையம் முன்பாக பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார், வி.சி.க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து வி.சி.கவினர் நாற்காலியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

இதையும் படிங்க: நேரில் ஆஜராகாத கெளதம சிகாமணி; ஜன.24-ம் தேதிக்கு மீண்டும் வழக்கு ஒத்திவைப்பு!

Last Updated : Jan 4, 2024, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.