தென்காசி: பழைய குற்றாலத்தில் சொகுசு விடுதியில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தங்கியுள்ளார்.
அவருக்கு பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த ஆயுதப்படை உதவி ஆய்வாளர் பார்த்திபன் இன்று அதிகாலையில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சமபவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தென்காசியில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி