ETV Bharat / state

திமுகவிற்கு எதிராக அதிமுக கையெழுத்து இயக்கம் தொடக்கம்! - ADMK signature movement has started permanently rejected the DMK

தென்காசி: அதிமுக சார்பில் "திமுகவை நிரந்தரமாக நிராகரித்துவிட்டோம்" என்ற கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

ADMK Reject dmk  அதிமுக கையெழுத்து இயக்கம் தொடக்கம்  ADMK signature movement  திமுகவை நிரந்தரமாக நிராகரித்துவிட்டோம்  ADMK signature movement has started permanently rejected the DMK
ADMK signature movement has started We Reject DMK
author img

By

Published : Jan 1, 2021, 11:49 AM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அனைத்து கட்சிகளும் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. அந்தவகையில், திமுகவினர் 'அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், திமுக பரப்புரைக்கு எதிராக தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், 'திமுகவை நிரந்தரமாக நிராகரித்துவிட்டோம்' என்ற கையெழுத்து பரப்புரை செங்கொட்டையை அடுத்த புளியரைப் பகுதியில் நடைபெற்றது.

தொடக்கம்

இந்தக் கையெழுத்து இயக்கத்தை, வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தொடக்கிவைத்தார். வடக்கு மாவட்டத்தில் உள்ள கடையநல்லுார், வாசுதேவநல்லுார், சங்கரன்கோவில் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளிலும் கையெழுத்து இயக்கம் வீடு வீடாகவும் மேற்கொள்ளப்படுகிறது. சுமார் 5 லட்சம் பேரிடம் திமுகவை நிரந்தரமாக நிராகரித்துவிட்டோம் என்ற கையெழுத்து பெறப்படுகிறது.

கையெழுத்து இயக்கம் தொடக்கம்

இந்நிகழ்ச்சியில், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ மனோகரன், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணி, பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 500-கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'அடுத்தக்கட்ட தேர்தல் பரப்புரை விரைவில் தொடக்கம்' - கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.