ETV Bharat / state

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை - முழு கொள்ளளவை எட்டிய அடவிநயினார் அணை!

author img

By

Published : Sep 21, 2020, 12:47 AM IST

தென்காசி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அடவிநயினார் அணைக்கட்டு இரண்டாவது முறையாக மீண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்சியடைந்துள்ளனர்.

முழு கொள்ளளவை எட்டிய அடவிநயினார் அணை
முழு கொள்ளளவை எட்டிய அடவிநயினார் அணை

தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய வடகரை அருகே 132 அடி கொள்ளளவு கொண்ட அடவி நயினார் நீர் தேக்கம் உள்ளது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் அணைப்பகுதிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் அணை நிரம்பியது.

பின்னர், கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தென்மேற்குப் பருவமழை குறைந்ததைத் தொடர்ந்த அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.

முழு கொள்ளளவை எட்டிய அடவிநயினார் அணை

இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து மழை பெய்து வரும் காரணமாக தென்காசி மாவட்டத்திலுள்ள அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 132 அடி கொள்ளவு கொண்ட அடவிநயினார் அணை, மீண்டும் இரண்டாவது முறையாக முழு கொள்ளவையும் எட்டி நிரம்பி வழிகிறது.

விநாடிக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கனமழையால் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் அதிகரிப்பு: விவசாயிகள் பெருமகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.