தமிழ்நாட்டில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே தேர்தல் ஆணையமும் மாவட்ட நிர்வாகமும் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் அஜித் ரசிகர்கள் வரவிருக்கும் வலிமை படத்தின் தலைப்பை மையமாக கொண்டு 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்த போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
அதில் ஜனநாயகத்தின் 'வலிமை' ஒவ்வொருவரின் வீட்டிலும் வாக்கிலும் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது தென்காசியில் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.