ETV Bharat / state

தென்காசியில் 5 தொகுதி வாக்கு இயந்திரங்கள் ஒரே இடத்தில் வைத்து சீல்! - 5 constituency voting machines sealed

தென்காசி: 5 தொகுதிகளில் வாக்குகள் பதிவான வாக்கு இயந்திரங்கள் ஒரே இடத்தில் வைத்து பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டன.

வாக்கு இயந்திரங்கள்
counting center
author img

By

Published : Apr 7, 2021, 9:59 PM IST

தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகள் உள்ளன. இங்குள்ள மொத்தம் 1,884 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்தன. இதைத்தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து, கொடிக்குறிச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. அங்கு வாக்கு இயந்திரங்கள் தொகுதிவாரியாக பிரித்து வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சமீரன் தலைமையில், வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட வாக்கு பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இதையும் படிங்க:பணம், பொருள்கள் பறிமுதல்; முதலிடத்தில் தமிழ்நாடு - தேர்தல் ஆணையம்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.