ETV Bharat / state

தென்காசியில் பறக்கும் படை அதிரடி: ரூ.3.95 லட்சம் பறிமுதல் - தென்காசி செய்திகள்

தென்காசி: தமிழ்நாடு - கேரள எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், 3 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

election
தென்காசி
author img

By

Published : Mar 9, 2021, 4:50 PM IST

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளில், தொகுதிக்கு தலா மூன்று பறக்கும் படையினர் குழு, மூன்று நிலை கண்காணிப்புக்குழு, ஒரு வீடியோ கண்காணிப்புக் குழு , ஒரு வீடியோப் பதிவு பார்வைக் குழு என 45 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் மூலம் வாகன சோதனைகளை நடத்த மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சமீரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 24 மணி நேரமும் பறக்கும் படை அலுவலர்களின் வாகனச் சோதனைகள் நடைபெற்றுவருகின்றன.

அந்த வகையில், புளியரை பகுதியில் நேற்று(மார்ச் 8) இரண்டு பறக்கும்படை குழுவினரின் வாகனச் சோதனையில் கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு லாரியில் கொண்டுவரப்பட்ட 73 ஆயிரம் ரூபாயும், மீன் ஏற்றிச் செல்லும் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 79 ஆயிரத்து 800 ரூபாயும், சுரண்டையை சேர்ந்த காய்கறி வாகனத்தில் 93 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 800 ரூபாய் பிடிபட்டது.

money seize
தென்காசியில் பறக்கும் படையினரின் வாகனச் சோதனை

இந்த சோதனையின்போது காவல்துறையினர், வட்ட ஆட்சியர் குழுவினர் உடனிருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பணமும் செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து, நேற்று மாலை(மார்ச்.8) நடந்த சோதனையில், கேரள மாநிலத்திலிருந்து பாவூர்சத்திரம் நோக்கி வந்த பிக்கப் வாகனத்தில், முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. எனவே, நேற்று ஒரே நாளில் மட்டும் 3.95 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மக்காச்சோளக் காட்டில் கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.