ETV Bharat / state

பலத்த காற்றுக்கு சாய்ந்த 1,500 வாழைகள் - விவசாயிகள் வேதனை - Tenkasi district news

தென்காசி: தென்காசி வடகரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று வீசியதன் காரணமாக வடகரைப் பகுதியில் சுமார் 1,500 வாழை மரங்கள் சாய்ந்தன.

Tenkasi farmer  தென்காசி  தென்காசி மாவட்டச் செய்திகள்  Tenkasi district news  banana trees fall
பலத்த காற்றுக்கு சாயந்த 1,500 வாழைகள்; விவசாயிகள் வேதனை
author img

By

Published : Aug 8, 2020, 4:42 PM IST

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்துள்ளன. குறிப்பாக வடகரை, பண்பொழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து விழுந்துள்ளன.

இதனால், அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாழை விவசாயி ஒருவர் கூறுகையில், "வடகரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்திருந்தனர்.

Tenkasi farmer  தென்காசி  தென்காசி மாவட்டச் செய்திகள்  Tenkasi district news  banana trees fall
காற்றினால் நாசமான வாழைகள்

வாழை அறுவடைப் பருவத்தை எட்டியிருந்த நிலையில், பலத்த காற்றூ வீசியதால் ஏறத்தாழ 5 ஆயிரம் வாழைகள் சாய்ந்துள்ளன. ஊரடங்கால் வாழைத்தார்களை அறுவடை செய்து வெளியூர்களுக்கு அனுப்ப முடியாததால், குறைந்த விலைக்கு வாழைத்தார்களை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சாய்ந்த வாழைகளைச் சோகத்துடன் பார்க்கும் விவசாயி

கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: நீதிமன்றத்தை திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.