தமிழ்நாட்டில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுப்பதில் தீவிர சோதனையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் இன்று (மார்ச்.21) தென்காசி மாவட்டம், புளியங்குடி-மதுரை செல்லும் சாலையில் மின்வாரிய அலுவலகம் முன்பு தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தென்காசியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணம் இன்றி 12,70,000 ரூபாய் இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அப்பணத்தை பறிமுதல் செய்து சிவகிரியில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மேலும் காரில் வந்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த முருகவேல், வீரகுமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுகவில் உழைக்கும் தொண்டர்கள் ஓரம்கட்டப்படுவர்- அன்புமணி தாக்கு