ETV Bharat / state

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியவருக்கு காவல் துறையினர் வலைவீச்சு!

author img

By

Published : Oct 6, 2020, 9:43 AM IST

தென்காசி: சங்கரன்கோவிலில் குடிபோதையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவர், கடையநல்லூரில் சிகிச்சைப் பெற்று வந்தவரை இறக்கிவிட்டு, சங்கரன்கோவில் ரயில்வே பீட்டர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள், திடீரென்று 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முத்துராஜை வழிமறித்து சரமாரியாகத் தாக்கி, ஆம்புலன்ஸ் சாவியை தூக்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் முத்துராஜ் வாகனத்தை விட்டு இறங்காமல் உள்ளேயே உட்கார்ந்திருந்துள்ளார். மேலும் அவரால் வாகனத்தை எடுக்க முடியாததால் ரயில்வே பீட்டர் சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: புளியரை வனப்பகுதியில் காட்டுத் தீ: அரியவகை மரங்கள் எரிந்து நாசம்…!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.