ETV Bharat / state

வெளிநாட்டில் கணவர் உயிரிழப்பு - இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆட்சியரிடம் மனைவி புகார் - போலந்து நாட்டிற்கு வேலைக்காக சென்றவர் இறப்பு

போலந்து நாட்டிற்கு வேலைக்காக சென்ற உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி அவரது மனைவி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கணவர் இறப்பு குறித்து ஆட்சியரிடம் மனு
கணவர் இறப்பு குறித்து ஆட்சியரிடம் மனு
author img

By

Published : Mar 10, 2022, 9:46 AM IST

சிவகங்கை: இளையான்குடி பஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆன நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சதீஷ்குமார் போலந்து நாட்டிலுள்ள உணவகம் ஒன்றில் டெலிவரி வேலைக்காக சென்றுள்ளார். வேலைக்கு சென்ற ஒரு வருடம் வரை சம்பளம் பெற்று வீட்டிற்கு அனுப்பி வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வரவில்லை என கூறப்படுகிறது.

கணவர் இறப்பு குறித்து ஆட்சியரிடம் மனு

மேலும், வேலை பார்த்த இடத்தில் சதீஷ்குமாரை அடித்து துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் கடந்த 1 வார காலமாக அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் இந்திய வெளியுறவுத்துறையினர் சதீஷ்குமாரின் தந்தை வீரபாண்டியை தொடர்பு கொண்டு தங்களது மகன் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தனது மகனின் உடலை மீட்கவும் அவரது இறப்பிற்கான காரணம் அறிய வேண்டும் என கூறி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: குமரி சட்டக்கல்லூரி மாணவர் படுகொலை: நெல்லையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டதால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.