ETV Bharat / state

தண்ணீர் பிரச்னையால் தவித்த கிராமம்: உதவிய சமூக செயற்பாட்டாளர்! - அறக்கட்டளை

சிவகங்கை: தண்ணீர் பிரச்னை உள்ள கிராமத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவர் தனது அறக்கட்டளை மூலம் ஆழ்துளை கிணறு அமைத்துக் கொடுத்துள்ள சம்பவம் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sivagangai
author img

By

Published : Jul 28, 2019, 3:04 PM IST

சிவகங்கை மாவட்டம் உச்சிபுளி உள்ளிட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இங்கு மக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட தேவைகள் எதுவுமே இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.

இந்தக் கிராமத்திற்கு சொந்தமான பொதுக் கிணறும் நீரின்றி வற்றியதால், குடிநீருக்கு நான்கு கி.மீ. தூரம் சென்றுதான் தண்ணீர் எடுத்துவரும் நிலை இருந்தது.

சிவகங்கை
ஆழ்துளை கிணறு அமைத்தல்

இது குறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இப்பகுதி மக்களின் துயரம் அறிந்த இக்கிராமத்திற்கு அருகே உள்ள பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் சுந்தர்ராஜ் என்ற சமூக செயற்பாட்டாளர் கிராம மக்களுக்கு உதவ முன்வந்தார்.

தண்ணீர் பிரச்னையால் தவித்த கிராமம்
அவருடைய அறக்கட்டளை சார்பாக ரூ.1 லட்சம் செலவில் இரண்டு கிராமத்திற்கும் ஆழ்துளை கிணறு அமைத்துக் கொடுத்து மக்களின் தண்ணீர் தாகத்தை தீா்த்து-வைத்துள்ளார். இதனால் அந்தக் கிராம மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Intro:சிவகங்கை ஆனந்த்
ஜூலை.28

தண்ணீர் பிரச்சினையை கண்டுகொள்ளாத அரசு - தாகம் தீர்த்த சமூக ஆர்வலர்!

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே தண்ணீர் பிரச்சினை உள்ள கிராமத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவர் தனது அறக்கட்டளை மூலம் ஆள்துளை கிணறு அமைத்துக் கொடுத்துள்ள சம்பவம் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Body:சிவகங்கை மாவட்டம் உச்சிபுளி உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மக்களின் அடிப்படை வசதிகளான சாலைவசதி, மின்சாரம், குடிதண்ணீர் உள்ளிட்ட தேவைகள் எதுவுமே இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இவா்கள் குடிதண்ணீருக்கு 4கி.மீ. துாரம் உள்ள கிராமத்திற்கு சென்று தான் தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த கிராமத்திற்கு சொந்தமான பொதுகிணறும் நீரின்றிவற்றி கிடக்கிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இப்பகுதி மக்களின் துன்பத்தை அறிந்த இக்கிராமத்திற்கு அருகே உள்ள பச்சேரி கிராமத்தை சேர்ந்த சென்னையில் வசிக்கும் சுந்தர்ராஜ் என்ற சமூகசேவகர் கிராம மக்களுக்கு உதவ முன்வந்தார்.

கிராமமக்களின் தண்ணீர் பிரச்சினையை போக்கிட அவருடைய அறக்கட்டளை சார்பாக ரூ.1லட்சம் செலவில் இரண்டு கிராமத்திற்கும் ஆழ்துளை கிணறு அமைத்து அமைத்துக் கொடுத்து இந்த மக்களின் தண்ணீர் தாகத்தை தீா்த்துவைத்துள்ளார். இதனால் அந்த கிராமத்தின் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Conclusion:மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவது அரசின் கடமை ஆனால் அதனை அரசு செய்யத்தவறியபட்சத்தில் தனி நபர்ஒருவர் முயற்சி எடுத்து மக்களின் தண்ணீர் தாகத்தை தீா்த்துவைத்தது மிகவும் பாராட்டக்கூடியதாக உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.