ETV Bharat / state

தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வந்த ஆசிரியர் - விஏஓ இடையே மோதல்! - மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்

சிவகங்கை : தேர்தல் பயிற்சி வகுப்பு வந்த ஆசிரியர் - விஏஓ இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

vao - teacher
author img

By

Published : Mar 30, 2019, 5:01 PM IST

சிவகங்கை மாவட்டம் மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆசிரியர் டாம் ரபேல் செபஸ்டியன் மற்றும் விஏஒ ராஜசேகர் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றி மோதலாக மாற, இருவரின் சட்டையும் கிழிக்கப்பட்டது. பின்னர் பயிற்சி வகுப்புக்கு வந்த ஆசிரியரை தாக்கிய விஏஒ-வைக் கண்டித்து உடன் வந்த ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் ஆசிரியர்களைக் கண்டித்து விஏஒ-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் வீஏஒ-க்கள்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் இருதரப்பினரிடமும் சமாதானம் செய்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விஏஓக்கும் ஆசிரியருக்கும் மோதல் - இருவருக்கும் சட்டை கிழிப்பு

சிவகங்கை மாவட்டம் மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் விஏஓ மற்றும் ஆசிரியர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கும் சட்டை கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பயிற்சிக்கு வந்த ஆசிரியர் டாம் ரபேல் செபாஸ்டியன் என்பவருக்கும் விஏஓ ராஜசேகர் என்பவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு இருவரது சட்டையும் கிழிக்கப்பட்டது.

ஆசிரியரை விஏஓ தாக்கியதை கண்டித்து பயிற்சிக்கு வந்த ஆசிரியர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களுக்கு எதிராக விஏஓக்களும் போராட்டம் நடத்தினர். இதனால் கல்லூரி வளாகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.