ETV Bharat / state

சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு பள்ளி மாணாக்கர்கள் தற்கொலை முயற்சி - பள்ளி மாணவர்கள் தற்கொலை முயற்சி

சிவகங்கை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவி, 12ஆம் வகுப்பு மாணவன் ஒரே நாளில் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் தற்கொலை முயற்சி

author img

By

Published : Aug 16, 2022, 5:20 PM IST

சிவகங்கை: திருப்புவனம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர் பள்ளியிலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனே அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தனியார் பள்ளி வளாகத்திலேயே மாணவன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதேபோல் திருப்புவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளியில் அவருக்கு சமூக அறிவியல் தேர்வு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவி தேர்வுக்கு தன்னை சரியாக தயார் செய்யவில்லை எனத்தெரிகிறது. பயத்தில் பள்ளி கழிவறைக்குள் சென்று தனது கை நரம்பை அறுத்துள்ளார். அதைப் பார்த்த சக மாணவிகள் சத்தம் போட்டுள்ளனர். மாணவிகள் ஆசிரியர்களிடம் சென்று கூற சென்றுள்ளனர்.

அப்போது மாணவி அங்கிருந்து ஓடி வந்து, பள்ளியின் இரண்டாவது தளத்திலிருந்து குதித்துள்ளார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்தச்சம்பவத்தில் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார். இவரை உடனடியாக அங்கிருந்து மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக அரசு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பள்ளி மாணவி தற்கொலைக்கு முயற்சித்தது இப்பகுதியில் மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கையில் ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் தற்கொலை முயற்சி
தற்கொலை எதற்கும் தீர்வல்ல... துணிந்து போராடுவோம்

இதையும் படிங்க: விசாரணைக்கு அழைத்துச்சென்ற சிறுவன் காவல்துறையினர் தாக்கியதாக விஷமருந்தி தற்கொலை முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.