சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மே தின மாநாட்டில் பங்கேற்ற டிடிவி தினகரன் செய்தியாளரைச் சந்தித்துப் பேசுகையில், ”எங்களது நோக்கமே அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான். திமுக தற்போது தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மின்வெட்டு பிரச்னையால் திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் என்னத் தொடங்கியுள்ளனர்.
இது அடுத்த தேர்தலில் திமுகவிற்கு பெரும் தோல்வியைக் கொடுக்கும். திமுகவுக்கு மட்டுமே இது விடியல் காலம். மக்களுக்கு இது இருண்ட காலம். இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்தது என்பது பொய், நான் நிரபராதி” எனக் கூறினார்.
இதையும் படிங்க: சென்னையில் அமைய உள்ள மேம்பாலத்தின் வரைகலை காட்சி வெளியீடு