சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே சிங் தலைமையில், மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், ஆய்வுக் கூட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து பல்வேறு கருத்துகள் ஆலோசனை செய்யப்பட்டது எனவும், தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் டோல் கேட் கட்டணங்கள் குறைக்க வாய்ப்புள்ளதா என செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த இணை அமைச்சர், ’டோல் கேட்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாகனங்களின் எண்கள் 6 மாதங்கள் கண்காணிக்கப்படும். அதன்பின் அடிக்கடி வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் குறைக்கப்படும்’ என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பாஜக வலிமையாக வளர்ந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாமியாராக அதிமுக.. மருமகளாக திமுக.. ஈபிஎஸ் கூறியது என்ன?