இன்று மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனையொட்டி, திருப்பரங்குன்றத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.
இதனால் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் சிவகங்கை டாஸ்மாக் கடையில் குவிந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததில் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் டாஸ்மாக் கடை ஊழியர்களால் கட்டுக் கடங்காத கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.
எனவே, டாஸ்மாக் ஊழியர்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கூட்டத்தினைக் கலைக்க லேசான தடியடி நடத்தினர். இதனையடுத்து, டாஸ்மாக் ஊழியர்கள் கடையை மூடினர்.
காவல் துறையினர் தடியடி நடத்திக் கலைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.