ETV Bharat / state

போலி நகைகளை வைத்து ரூ.36.52 லட்சம் மோசடி - நகை மதிப்பீட்டாளர் கைது!

சிவகங்கை : திருப்புவனம் அருகே வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிபவர், 19 பேரின் பெயரில் போலி நகைகளை வைத்து 36 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக மேலாளர் கொடுத்த புகாரையடுத்து, அவரைக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

நகை மதிப்பீட்டாளர் செந்தில் குமார்.
author img

By

Published : Mar 18, 2019, 10:35 PM IST

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேவுள்ள லாடனேந்தல் கிராமத்தில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார். இவர் கடந்த 18.08.2016 தேதி முதல் 09.11.2018 வரை வங்கியில் 19 பேரின் பெயரில் 2077 கிராம் அளவுள்ள போலி நகைகளை வைத்து 36 லட்சத்தி 52 ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வங்கியில் வேறொரு கிளையில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களை வைத்து அடிக்கடி சோதனை செய்வது வழக்கமாக உள்ள நிலையில், மதுரை கிளையை சேர்ந்த வங்கி நகை மதிப்பீட்டாளர் கதிரேசன் என்பவர் இந்த வங்கியில் சோதனை மேற்கொண்டுள்ளார். போலி நகைகள் குறித்து தெரிந்த பின்னரும் சோதனை செய்த கதிரேசன் கிளை மேலாளருக்கும் தகவல் கூறவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதனை கண்டுபிடித்த தற்போதையை வங்கி முதன்மை மேலாளர் பவுன்ராஜ் சிவகங்கையில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலி நகையை வைத்து 36 லட்சத்தி 52 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாக நகை மதிப்பீட்டாளர் செந்தில்குமார் மீதும் மோசடி செய்ய துணை புரிந்ததாக மதுரை கிளை நகை மதிப்பீட்டாளர் கதிரேசன் மீதும் வழக்குப்பதிவு செய்த நிலையில், லாடனேந்தல் கிளையின் நகை மதிப்பீட்டாளர் செந்தில்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை    ஆனந்த்
மார்ச்.18

வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.36 லட்சம் மோசடி - நகை மதிப்பீட்டாளர் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிபவர் 19 பேர் பெயரில் போலி நகைகளை வைத்து 36 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் நகை மதிப்பீட்டாளரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருப்புவனம் அருகேவுள்ள லாடனேந்தல் கிராமத்தில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்துவருபவர் செந்தில்குமார். 

இவர் கடந்த 18.08.2016 தேதி முதல் 09.11.2018 வரை வங்கியில் 19 பேர்களுடைய பெயரில் 2077 கிராம் அளவுள்ள போலி நகைகளை வைத்து 36 லட்சத்தி 52 ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளார். 

இந்த வங்கியில் வேறொரு கிளையில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களை வைத்து அடிக்கடி சோதனை செய்வது வழக்கமாக உள்ள நிலையில் மதுரை கிளையை சேர்ந்த வங்கி நகை மதிப்பீட்டாளர் கதிரேசன் என்பவர் இந்த வங்கியில் சோதனை செய்த பின்னரும் நகைகள் போலி நகைகள் என இந்த வங்கி கிளை மேலாளருக்கும் தகவல் கூறவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதனை கண்டுபிடித்த தற்போதையை வங்கி முதன்மை மேலாளர் பவுன்ராஜ் சிவகங்கையில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். 

இதனையடுத்து போலி நகையை வைத்து 36 லட்சத்தி 52 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாக நகை மதிப்பீட்டாளர் செந்தில்குமார் மீதும் மோசடி செய்ய துணை புரிந்ததாக மதுரை கிளை நகை மதிப்பீட்டாளர் கதிரேசன் மீதும் வழக்குப்பதிவு செய்த நிலையில் லாடனேந்தல் வங்கி கிளையின் நகை மதிப்பீட்டாளர் செந்தில்குமாரை கைதுசெய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.