ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை இழிவுபடுத்தி வந்த வாட்ஸ் ஆப் தகவலைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பிரிவு மக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நான்காவது நாளாக இன்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று புதுவயல், கண்ணங்குடி பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று, இழிவாகப் பதிவிட்டவர்களைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.