சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த வினிதாவுக்கும், சானாவூரணியை சேர்ந்த ஆரோக்கியலியோவுக்கும் கடந்த ஜனவரி மாதம் 17ஆம்தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் சிவகங்கையில் வீடு பார்த்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஆரோக்கிய லியோ வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்றார்.
தனிமையில் பொழுதைக் கழித்த வினிதாவை டிக்டாக் செயலி ஈர்த்துள்ளது. அதில் தனது திறமையை வெளிப்படுத்த முனைப்பு காட்டியுள்ளார். திருவாரூரை சேர்ந்த அபி என்ற பெண் வினிதாவுக்கு அறிமுகமாகி இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இருவரும் டிக்டாக்கில் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு நட்பு இறுக்கமானதாக இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 17ஆம்தேதி ஆரோக்கிய லியோ மனைவியை பார்க்கும் ஆசையில், சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு திரும்பியுள்ளார். ஆனால் வினிதாவோ தனது கணவரிடம் வேண்டா வெறுப்பாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அவருக்கு வினிதாவின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளது. சந்தேகம் கொண்டு மனைவியின் செல்போனை எடுத்து பார்த்தபோது வினிதா, வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட வீடியோ காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து தனது மனைவியிடம் விசாரித்தபோது, அபி மீது தான் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாக வினிதா கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து ஆரோக்கிய லியோ தனது மாமனார் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த வினிதா யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் செல்லும் போது 50 சவரன் தங்க நகையையும் எடுத்து சென்றதாக வினிதாவின் தாய் அருள் ஜெயராணி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அருள்ஜெயராணி அளித்த புகாரின் பேரில் திருவேகம்பத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வினிதாவை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:Latest Crime News ஆபாச வலைதளங்களில் வெளியான டிக்-டாக் வீடியோக்கள்; பயனாளிகள் அதிர்ச்சி!