ETV Bharat / state

விடாமல் பேசிய விவசாயியை மாவட்ட ஆட்சியர் வெளியே போக சொன்னதால் பரபரப்பு - district collector

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விடாமல் பேசிய விவசாயியை பொறுமையிழந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வெளியே போக சொன்னதால் இச்சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

விடாமல் பேசிய விவசாயியை மாவட்ட ஆட்சியர் வெளியே போக சொன்னதால் பரபரப்பு...

author img

By

Published : Aug 26, 2022, 10:30 PM IST

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் மாதம்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்களது குறைகள் குறித்து எடுத்துரைக்கவே, அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஆட்சியர் விவசாயிகளுக்கு பதிலளித்து வந்தார்.

இந்நிலையில் அதில் கலந்துகொண்ட தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச்செயலாளர் முத்துராமலிங்கம், திருப்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் திறக்கப்படாமல் இருப்பதாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்கவும் கூறினார்.

ஆனால், அந்த பிரச்னை குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும்; அது குறித்துப் பேச முடியாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆனால் மீண்டும், மீண்டும் அந்தப் பிரச்னை குறித்தே அவர் பேச, அதற்கு மீண்டும் பதிலளித்த ஆட்சியர் 'இது விவசாயிகள் குறைதீர் கூட்டம். இதில் விவசாயப் பிரச்னைகளை மட்டுமே பேச வேண்டும்’ எனக்கூறினார்.

இந்நிலையில் மீண்டும் அவர் அதே பிரச்னையைப் பேச பொறுமையிழந்த மாவட்ட ஆட்சியர் அவரை அமைதியாக உட்காருங்கள் அல்லது அரங்கத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என எச்சரித்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் அமைதியாக அமர முற்படுகையில், மற்றவர்கள் அவரை வெளியே செல்ல சொன்னார்கள். இந்நிலையில், சுற்றத்தார் தன்னை வெளியில் போக சொன்னது தவறு என்றும்; இது தனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக முத்துராமலிங்கம் மாவட்ட ஆட்சியரிடம் கூறினார்.

விடாமல் பேசிய விவசாயியை மாவட்ட ஆட்சியர் வெளியே போக சொன்னதால் பரபரப்பு

விடாமல் பேசிய விவசாயியை மாவட்ட ஆட்சியர் வெளியே செல்ல சொன்ன சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:சாதி ரீதியாக பேசிய பேராசிரியை மீது விசிக மீண்டும் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.