சிவகங்கை: கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அங்கு ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு அப்பகுதி இளைஞர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
கீழடி, அகரம், மணலூர் கொந்தகை ஆகிய நான்கு இடங்களிலும் ஒன்றிய அரசு சார்பாக மூன்று கட்ட அகழாய்வும், அதனைத் தொடர்ந்து மாநில அரசு சார்பாக 4 கட்ட அகழாய்வு பணிகள் என 7கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன.
![தற்காலிக தொல்பொருள் கண்காட்சியகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13569772_keeladi.jpg)
இப்பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை வந்துள்ள ஆய்வு முடிவுகளின் படி அனைத்தும் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.
![தற்காலிக தொல்பொருள் கண்காட்சியகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13569772_keeladi1223.jpg)
இந்நிலையில் கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அகழாய்வில் பணியாற்றிய தொல்லியல்துறை ஆய்வாளர்கள், அலுவலர்களுக்கு கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்ரமணியன் தலைமையில் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக நினைவுப்பரிசு மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
மேலும், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் அகழாய்வுத் தளம் அருகே தற்காலிக தொல்பொருள் கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை பெருவெள்ளம்: விமானங்கள் தாமதம்; பயணிகள் அவதி!