சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஜான் பிரிட்டோ.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் அங்கன்வாடி வகுப்பு தொடங்கப்பட்டதால், மாற்று பணியாக எஸ்.புதூர் ஒன்றியம் கணபதிபட்டி அரசுப்பள்ளிக்கு கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
நேற்று வழக்கம் போல் கணபதிபட்டி அரசுப்பள்ளிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை சிங்கம்புணரி அருகே எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து புழுதிபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.