தைத்திருநாளான பொங்கல் திருநாளன்று பல்வேறு இடங்களில் ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. அரசியல்வாதிகள், அமைச்சர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. இம்மாதம் மட்டுமல்லாமல் அடுத்த மாதமான மார்ச் மாதமும் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் முன்னிலையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த 13-க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் குழுக்களாக பிரிந்து அடக்கினர். விழாவை காண பொதுமக்கள், வீரர்கள் பலர் வருகைத் தந்தனர். இதில், சினிமா நடிகர்கள் விமல், சூரி, ரோபோ சங்கர், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் வருகை தந்து மஞ்சு விரட்டை கண்டு ரசித்தனர்.
.