சிவகங்கை மாவட்டம், பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட தெக்கூரைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களது ஊரின் எல்லையில் 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' என அறிவிப்புப் பலகை வைத்து தமிழ்நாடு அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தப் பலகையை, அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் நற்பணி மன்றத்தினரும், மகளிர் அமைப்பினரும் இணைந்து அமைத்துள்ளனர்.
இதுகுறித்து நற்பணி மன்ற இளைஞர்கள் கூறுகையில், "வாக்குச்சீட்டுகளுக்குப் பணம் வாங்குவது தேசத்திற்கு செய்கின்ற துரோகம். இதனை எங்கள் ஊரில் உள்ள அனைத்து மக்களும் உணர்ந்துள்ளனர். 500 வாக்குகள் இருந்தாலும்கூட, நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு, இந்தச் செயலுக்கு எங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்'' என்றார்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, இதுபோன்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி, அறிவிப்புப் பலகை வைத்து, இந்த கிராமத்தினர் பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு